சிறைக்குள் கலவரம் – 29 கைதிகள் உயிரிழப்பு- 20 பொலிஸார் படுகாயம்!!

சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்ததுடன், 20-க்கும் மேற்பட்ட பொலிஸார் படகாயமடைந்தனர் எனத் தெரிவி்க்கப்படுகிறது.

வெனிசுலா வடமேற்கு பகுதியில் உள்ள அகேரிகுவா நகரச் சிறைச்சாலையில் கலவரம் நடந்துள்ளது.

250 கைதிகள் இருக்கக் கூடிய குறித்த சிறைச்சாலையில், 540-க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளைச் சந்திக்க வந்த பார்வையாளர்கள் சிலர் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்ததும் சிறப்பு படை பொலிஸார், அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது கைதிகள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளால் பொலிஸாரை நோக்கி சுட்டனர். இதில் பல பொலிஸார் படுகாயமடைந்தனர். பொலிஸாரும் பதிலுக்கு சுட்டனர். கையெறி குண்டு களும் வீசப்பட்டன. இதனால் சிறை கலவர பூமியானது.

இந்தக் கலவரத்தில் 29 கைதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like