சிறைக்கைதிகள் நடைபயணம்!!

உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை சிறைச்சாலை விளக்கமறியலில் உள்ள கைதிகள் நடைபயணத்தில் ஈடுபட்டனர்.

சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் கே.ஏ.எஸ்.அபேரத்தின தலைமையில் நடைபெற்ற நடைபயணம், திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து ஆரம்பித்து, திருகோணமலை நகரம் ஊடாக சென்று மணிக்கூட்டு கோபுரத்தினூடாக திருகோணமலை சிறைச்சாலையை மீ்ண்டும் வந்தடைந்தது.

இதன்போது பொது மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

You might also like