சீயோன் தேவாலயத்தைப் பார்வையிட்ட தொண்டு நிறுவனத்தினர்!!

ஜேர்மன் தொண்டு நிறுவன செயற்பாட்டாளர் குழுவினர், குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தைப் பார்வையிட்டனர்.

காலி மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வத்தேகம சமிந்த தேரர், ஜேர்மன் நாட்டு வானவில் நிறுவனத்தின் தலைவர் மார்ட்டின் ஹென்றிக் உள்ளிட்ட குழுவினர் தேவாலயத்தைப் பார்வையிட்டனர்.

குழுவினர் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களின் குறைபாடுகள் பற்றிய தகவல்களையும் ஆராய்ந்தனர்.

You might also like