சுகாதாரப் பரிசோதகர் கொலை – குற்றவாளிக்கு மா.இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்பு

திருகோணமலை – தம்பலகாமம், சாலியபுர பகுதியில் டெங்கு பார்ப்பதற்காக வீடுகளுக்கு சென்ற நபரை உலக்கையால் அடித்து கொலை செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியனால் இந்தத் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

தம்பலகாமம், சாலியபுர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய செனரத் முதியன்சலாகே ரெஜினோல் வெல்கம என்பவருக்கே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 09 ஆம் திகதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று சர்வோதயத்தினால் வழங்கப்பட்ட நுளம்பு வலைகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளித்து விட்டு சாலியபுர பகுதியிலுள்ள வீடுகளுக்கு டெங்கு சோதனைகளை மேற்கொள்ளச் சென்றுள்ளனர்.

இதன்போது வீட்டைச் சோதனையிடுவதற்கு வீட்டு உரிமையாளரை அழைத்த போது வீட்டு உரிமையாளர் பொதுச் சுகாதார பரிசோதகரை உலக்கையால் அடித்துள்ளார்.

உயிரிழந்தத, பொதுச் சுகாதார பரிசோதகரது உடலில் ஆறு காயங்கள் காணப்பட்டதாகவ சட்ட வைத்திய நிபுணர் மன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

கொலையை கைமோசக்கொலை (ஆட்கொலை) குற்றம் என குறிப்பிட்டு குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்துமாறும் கட்டத் தவறும் பட்சத்தில் மூன்று மாத கடூழியச் சிறைத் தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close