செம்மலையில் சட்ட விரோத மீன்பிடி- கைதான மீனவர்களுக்கு மறியல்!!

முல்லைத்தீவு செம்மலை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்கள் படகுடன் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகிலிருந்து சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் வலைகள் மற்றம் உபகரணங்கள் காணப்பட்டதை அடுத்து கடற்படையினர் மீனவர்களைக் கைது செய்தனர்.

மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

முல்லைத்தீவு மவாட்ட நீதவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்ட மீனவர்களை, எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like