சோலை மாதிரிக் கிராமத்துக்கு அடிக்கல்!!

போரின் போது உறவுகளை இழந்து கிளிநொச்சி செஞ்சோலையில் வளர்ந்து கல்வி கற்ற ஒரு தொகுதி பிள்ளைகளுக்கான மாதிரி கிராமத்துக்கான அடிக்கல் கல்மடு நகரில் நடப்பட்டுள்ளது. குறித்த மாதிரி கிராமத்துக்கு சோலை மாதிரிக்கிராமம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அடிக்கல் நட்டார்.

நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர், கண்டாவளை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like