தனியார் காணிக்குள் புலிகளின் தடயங்களைத் தேடிய பொலிஸார்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு வடக்கில் தனிநபர் ஒருவரின் காணிக்குள், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது.

குறித்த காணியில் விடுதலைப்புலிகள் வெடிபொருள்கள் மற்றும் பெறுமதியான பொருள்களைப் புதைத்து வைத்தனர் என்று கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, பொலிஸார் நீதிமன்றிடம் அனுமதி கோரினர்.

அதனையடுத்து நீதிமன்ற பதிவாளர் மற்றும் பொலிஸார், படையினர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலர் ஆகியோர் முன்னிலையில் தேடுதல் இடம்பெற்றது. எனினும் அங்கிருந்து எதுவித பொருள்களும் மீட்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like