தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்

இந்­திய கிரிக்­கெட் வீரர் ஹர்­ப­ஜன் சிங், தனது வழக்­க­மான பாணி­யில் தமி­ழக மக்­க­ளுக்குப் புத்­தாண்டு வாழ்த்­துக்­களை தமி­ழில் தனது கீச்சகப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்­டி­யின் போது, சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி­யில் இடம்­பெற்ற ஹர்­ப­ஜன் சிங், தமிழ் மக்­க­ளுக்கு ஆத­ர­வா­க­வும், தமிழ் கிரிக்­கெட் ரசி­கர்­க­ளுக்­கெ­ன­வும் தனது பல்­வேறு கருத்­து­கள் மற்­றும் வாழ்த்­து­களைத் தமி­ழில் ட்வீட் செய்திருந்தார். இத­னால் அவ­ருக்­கென ஒரு தனி ரசி­கர் பட்­டா­ளமே உரு­வா­னது என்று கூற­லாம்.

கடந்த ஒரு வரு­ட­மாக அவர் எந்த ஒரு தமிழ் பண்­டி­கை­யா­னா­லும் தமி­ழில் ட்வீட் செய்து வழக்­கம். அதன்­படி, தமிழ் புத்­தாண்டை முன்­னிட்டு, தனது வழக்­க­மான பாணி­யில் மோனை, எது­கை­யு­டன் தமி­ழில் வாழ்த்துக் கூறி­யுள்­ளார்.

தனது ட்விட்­டர் பக்­கத்­தில் அவர்,
“பாச­மும்,நேச­மும் இனி­தோடு,
நாளைய சூரி­ய­வி­டி­ய­லின் துணை­யோடு, பல வெற்­றிப்­ப­டி­க­ளின் கன­வோடு, கல்­வி­யும் கலை­யும் அறி­வோடு,உண்­மை­யும் உழைப்­பும் உயி­ரோடு,உறு­தி­மிகு தமிழா விழிப்­போடு,நாளைய உல­கம் வெல்க துணி­வோடு. தமி­ழோ­டும்,தமி­ழ­ரோ­டும் உற­வாடு! நல் உற­வோடு!
தமிழ்­புத்­தாண்டு வாழ்த்­துக்­கள் அன்பு சொந்­தங்­களே!”
என்று பதி­விட்­டுள்­ளார்.

மேலும், தமி­ழர் போன்று நெற்­றி­யில் விபூ­தி­யு­டன் இருக்­கும் ஹர்­ப­ஜ­னின் ஔிப்படமும் சமூக வலைத்­த­ளங்­க­ளில் பிரபல்யம் அடைந்து வரு­கி­றது.

You might also like