side Add

தமிழ் மொழித் திறன் போட்டிகள் விரைவில்!!

அகில இலங்கை தமிழ் மொழித் திறன் போட்டிகள் அனைத்தும் பாடசாலை மட்டத்தில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடைய வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் தமிழ் மொழித் திறன் போட்டிகள் பாடசாலை மட்டத்தில் நடைபெறும்.அதில் தெரிவு செய்யப்படுபவர்கள் வலய மற்றும் மாகாண மட்ட போட்டிகளில் பங்கு பற்ற முடியும்.

மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் தேசிய ரீதியில் போட்டியில் பங்கு பற்ற முடியும். பேச்சு ,பாவோதல் ,இலக்கிய விமர்சனம்,இசையும் அசைவும்,தனி இசை,குழு இசை ,தனி நடனம் ,குழு நடனம் ,நாட்டிய நாடகம் ,இலக்கிய நாடகம்,வில்லுப் பாட்டு ,முஸ்லிம் நிகழ்ச்சி போன்ற போட்டிகள் நடைபெறும்.

இந்தப் போட்டிகள் ஒவ்வொரு மட்டத்திலும் குறித்த திகதிக்குள் நிறைவடைய வேண்டும் என்று தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை மட்ட போட்டிகள் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னரும்,வலய மட்டப் போட்டிகள் மார்ச் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னரும்,மாகாண மட்ட போட்டிகள் மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னரும் நடத்தப்பட வேண்டும்.

அதே போன்று தேசிய போட்டிக்கான விண்ணப்பங்கள் மே மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும். தேசிய மட்ட போட்டிகள் ஜூலை மாதம் 13,14,20,21 ஆம் திகதிகளில் நடைபெறும்.

இந்த விடயம் தொடர்பான சுற்றறிக்கை சகல மாகாண கல்வி பணிப்பாளர்கள்,வலய கல்வி பணிப்பாளர்கள்,கல்வி அமைச்சின் செயலாளர்கள்,அதிபர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You might also like