side Add

தானாகவே பதவி விலகும் -பிரதேச சபை உறுப்பினர்!!

யாழ்ப்பாணம் வலி. வடக்குப் பிரதேச சபையில் இருந்து விடுமுறை அனுமதி இன்றிச் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் தான் பதவி விலகுவதாக தேர்தல்கள் செயலகத்துக்கு அறிவித்துள்ளார்.

வலி. வடக்கில் உறுப்பினரான கோபிநாத் சபைக்கு சுகவீன விடுமுறை என அறிவித்து விட்டு வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் இவர் வெளிநாடு சென்ற நிலையில், தற்போது 3 மாதங்களை எட்டியுள்ளது. உறுப்பினர் ஒருவர் தொடர்ச்சியாக 3 மாதங்கள் முறையான அனுமதியோ அல்லது வெளிநாட்டுக்கு அனுமதி இன்றியோ பயணித்தால் உறுப்புரிமை இழக்க கூடும்.

இந்த நிலையில் குறித்த உறுப்பினர் தானாகவே பதவி விலக இணக்கம் தெரிவித்துள்ளார்.

இவரது வெற்றிடத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் புதிய ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

You might also like