side Add

திருமணத்துக்காக ஏலத்தில் விடப்பட்ட சிறுமி!!

தெற்கு சூடானில் 17 வயது மகளை திருமணத்திற்காக அவரது தந்தை ஏலத்தில் விட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது .

இந்த ஏலத்தில் 6 பேர் கலந்து கொண்டனர். இறுதியாக தொழிலதிபர் ஒருவர் 500 மாடு, 3 விலையுயர்ந்த கார்கள் மற்றும் 1 மில்லியன் உள்ளூர் மதிப்பிலான பணம் கொடுத்து அந்தப் பெண்ணை திருமணம் செய்ய ஏலத்தில் எடுத்துள்ளார்.

இவர்களின் திருமணம் கடந்த 9-ஆம் திகதி நடைபெற்றுள்ளது. அந்தத் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தெற்கு சூடானில் பெண்களின் திருமண வயது 18 தான், ஆனால் நாட்டின் பஞ்சம் போன்றவைகள் காரணமாக 50 சதவீத பெண்கள் தங்களுடைய 18-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு முன்னரே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானலும், அவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

You might also like