தேர்தல் வன்முறை- 6 பேர் உயிரிழப்பு!!

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த மோதலில் 6 பேர் உயிரிழந்தனர் என்றும், 200க்கும் அதிகமானோர் காயமடைந்ததானர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தல் வேட்பாளர் பிரபோவோ சுபியாந்தோவின் ஆதரவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் மூண்டன.

அதிபர் தேர்தலில் திரு. ஜோக்கோ விடோடோ வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்ததை எதிர்த்து அவர்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொலிஸார் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தியும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முயன்றனர்.

இதனையடுத்து சில பிரதேசங்களில் சமூக வலைத்தளங்களை முடக்கப் போவதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You might also like