தொடருந்து நிலையத்தில்- கைதான பெண் விடுவிப்பு!!

யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண், விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் உடமையில் இலத்திரனியல் பொருள்கள் இருந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விசாரணையில், குறித்த பெண் ஜேர்மன் பிரஜாவுரிமை பெற்றவர் எனவும் , மானிப்பாயில் உள்ள தனது பிள்ளையின் பேரப்பிள்ளைகளுக்காக ரிமோட் கார் , அதற்கான ரிமோட் மற்றும் பற்றரிகள் உள்ளிட்ட இலத்திரனியல் விளையாட்டு பொருள்களை கொண்டு வந்துள்ளார் எனவும் தெரியவந்தது.

அதனை அடுத்து குறித்த பெண்ணிடம் வாக்கு மூலத்தைப் பெற்ற பொலிஸார் அவரை விடுவித்தனர்.

You might also like