நண்பர்களுடன் நீராடியவர் சடலமாக மீட்பு!!

நண்பர்களுடன் வாய்க்காலில் நீராடியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இ்நதச் சம்பவம் மட்டக்களப்பு 39 ஆம் கொலனிப் பகுதியில் நடந்துள்ளது.

களுவாஞ்சிக்குடி குறுமன்வெளியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

நீர்ச் சுழியில் முழ்கி தத்தளித்த நபரை காப்பாற்ற முயன்ற நண்பர்கள் இருவரும் சுழியில் மாட்டிக் கொண்டனர். மூவரையும் மீட்பதற்கு நண்பர்கள் முயற்சித்தனர். எனினும் இருவரை மட்டும் மீட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஒருவர் காணாமல் போன நிலையில் இன்று காலை வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

You might also like