side Add

நறுவிலிக்குளத்தில் வெளிவரும் புராதன மட்பாண்டங்கள்!!

மன்னார் நறுவிலிக்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று நான்காவது இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அகழ்வுப் பணிகளில் இரண்டு அடி ஆழத்தின் கீழ் அதிகமாக பழங்காலத்து மட்பாண்டங்கள் கிடைப்பதோடு, சீன கண்ணாடி குவலை துண்டுகள் வளையல்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்

மன்னார் மாவட்டத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக நறுவிலிக்குளத்தில் ஒதுக்கப்பட்ட காணியில் கட்டுமானப்பணிகள் நடைபெற்றன. இதன் போது நிலத்தடியில் இருந்து அதிகமான மட்பாண்டங்கள் வெளி வந்தன.

அதனையடும்மு தொல்பொருள் திணைக்களம் இவ்விடம் தொல்பொருள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்று விளையாட்டு மைதான கட்டுமானப் பணிகளை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like