நாட்டை பாதுகாக்க தவறிய அரசுக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கக் கூடாது!!

நாட்டை பாதுகாக்கத் தவறிய அரசு பதவி விலக வேண்டும். இந்த அரசைக் காப்பாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயல வேண்டாம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றில் இன்று முன்வைத்து உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,

அண்மைய தாக்குதல் முதல் அனைத்து பாதகாரச் செயல்களுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான முடிவை எடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்தியவர்கள் கண் முன் தெரியும் போது சரியான முடிவை எடுக்க வேண்டும். இந்த அரசுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மை மட்டுமல்ல, மக்களிடத்திலும் பெரும்பான்மை ஆதரவு இல்லை. அரசை நடத்தும் உரிமை இந்த அரசுக்கு கிடையாது.

மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசு அக்கறை கொள்ளவில்லை. நாட்டை நிர்வகிக்க தெரியாத அரசை என்ன செய்வது? இப்படியான குற்றவாளிகள் நாட்டை ஆளலாமா ? இவர்கள் ஆட்சி செய்ய யோக்கியதை கிடையாது. இவர்கள் ஆள்வதற்கு தகுதியற்றவர்கள்- என்றார்.

You might also like