நீர்கொழும்பு சம்பவம் -இருவர் கைது!!

நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற சம்பவம் மதுபோதையினால் செயல்பட்ட சிலரால் நிகழ்த்தப்பட்டது.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இரண்டு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய் தகராறு இதற்கு காரணமாகும். இந்த சம்பவத்தின் போது கூடுதலான மதுபானம் அருந்திருந்த மற்றுமொறு குழுவினர் சம்பவத்தில் தலையீடு செய்தனர் . இந்த தலையீட்டை அடுத்து அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி சிலவற்றுக்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை. கையால் தாக்கப்பட்ட சம்வங்கள் இடம்பெற்றுள்ளன.

சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் சில நபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You might also like