பட்டதாரிகள் நியமனத்தின் போது வடக்கு, கிழக்குக்கு முன்னுரிமை

உள்­ளூ­ராட்சி உத­வி­யா­ளர் சங்­கத்­தின் தலை­வர் கோரிக்கை

பட்­ட­தா­ரி­கள் ஆள்சேர்ப்பு விண்­ணப்­பங்­க­ளின்­போது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் மூப்பு அடிப்­ப­டை­யில் அல்­லாது சகல வேலை­ தேடும் பட்­ட­தா­ரி­க­ளுக்­கும் முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்­டும் என வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சி உத­வி­யா­ளர் சங்­கத்­தின் தலை­வர் தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
பட்­ட­தா­ரி­க­ளின் கோரிக்­கைக்கு அமை­வாக அரச நிய­ம­னங்­க­ளுக்­கான ஆள் சேர்ப்­புக்கு விண்­ணப்பங் கள் கோரப்­பட்­டுள்­ளது.

கடந்த 30 ஆண்­டு­கா­லப் போரின் தாக்கத்துக்கு உட்­பட்டு பல்கலைக்கழக கல்வியை முடித்து பட்­டம் கையில் உள்ள சக­ல­ருக்­கும் வேலை கொடுக்க நல்­லாட்சி தலைமை முன்­வ­ர­ வேண்­டும்
வரு­டாந்­தம் நாடு தழு­விய ரீதி­யில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட 12 பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் ஊடாக 14 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­கள் வெளி­யே­று­கின்­ற­னர்.

இவர்­க­ளில் பெரும்­பா­லா­னோர் வெளி­நா­டு­க­ளில் மேற்­ப­டிப்­புக்­கா­க­வும் வேலைக்­கா­க­வும் சென்­று­வி­டு­கின்­ற­னர்.

குறிப்­பிட்ட வீதத்­தி­னர் தனி­யார், அரச துறை­க­ளுக்கு செல்­கின்­ற­னர். மீத­மான பட்­ட­தா­ரி­கள் வரு­டாந்­தம் சாலைக­ளில் இறங்கி போராட்­டம் செய்தே வேலை­வாய்ப்­பைத் தேடும் நிலை ஏற்­ப­டு­கின்­றது.

எனவே, தற்­போது வடக்­கி­லும் கிழக்­கி­லும் உள்ள வேலை­தேடும் பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஆண்டு மூப்பு என்­ப­த­னைக் கருத்­தில் கொள்­ளாது – நிலை­யி­யல் கூற்றை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டுள்ள சகல பட்­ட­தா­ரி­க­ளும் நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட வேண்­டும்.

அத்­து­டன் 45 வய­தினை அடிப்­ப­டை­யா­கக் கொள்ள வேண்­டும். வேலை­தேடும் பட்­ட­தா­ரி­கள், ஒருங்­கி­ணைந்த வகை­யில் 20 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­கள் திட்­டத்­தில் உள்­வ­ரு­வ­தற்கு ஒற்­று­மை­யு­டன் செயற்­ப­ட­வேண்­டும்.

இதற்கு மேலாக நல்­லாட்சி அர­சும் அத­னோடு இணைந்த வேலை வாய்ப்பை வழங்­கும் அமைச்­சும் வடக்கு, கிழக்­கில் உள்ள பாதிக்­கப்­பட்ட வேலை­தேடும் பட்­ட­தா­ரி­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­க­வேண்­டும் – என்­றார்.

You might also like