பட்டானிச்சூரில் 116 வீடுகள்!!

வர்த்தக கைத்தொழில் மற்றும் நீண்டகாலம் இடம் பெயர்ந்தோருக்கான மீள் குடியேற்ற அமைச்சினால் வவுனியா, பட்டானிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் உள்ளடக்கியதாக 116 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

10 இலட்சம் ரூபா பெறுமதியான குறித்த வீட்டுத்திட்டத்துக்கான கட்டுமாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப நிகழ்வில் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சரின் வவுனியா நகர இணைப்பாளரான அப்துல்பாரி, வவுனியா நகரசபை உறுப்பினர் ஆர்.எம்.லரீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like