பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி விரைவில்!!

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்காக 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 31 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம். குணரத்ன தெரிவித்துள்ளார்.

You might also like