side Add

பல்கலை பட்டப்படிப்பில் இணைத்துக்கொள்ள – அனுமதிக்கடிதங்கள்

பன்னாட்டு பல்கலைக்கழக பட்டப்படிப்பில் இணைந்து கொள்ளும் வகையில் பதுளை மாவட்ட பெருந்தோட்டங்களைச் சேர்ந்த 620 பேருக்கு அனுமதிக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

பதுளை சைமன் பீரிஸ் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக ஈரானிய உயர்ஸ்தானிகர் சைரி அமிராணி, ஈரானிய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாசார கொன்சியூலர் முஸ்தபா சொக்ரப், அல் – முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் பிரதி துணைவேந்தர் அலி காஷிமி அல் முஸ்தபா பல்கலைக்கழகத்தின் பதிவாளர். அருணசிறி ஜயலத், பொருளாளர் எம். வஹாப்தீன், அரசறிவியல் துறையின் முதல்வர் பவாஸ் பாருக்இ நீதித்துறையின் முதல்வர் எம்.பி.எம். ரமீஸ், உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

You might also like
X