side Add

பாடையை நினைவுபடுத்திய இறுதிச் சடங்கு!!

தமிழர்களின் இறுதிச் சடங்கில் பாடையில் சடலம் கொண்டு செல்லப்படும் முறைகள் அருகிப் போகும் நிலையில் இன்று அவ்வாறான இறுதி ஊர்வலத்தைக் காணக் கூடியதாக இருந்தது.

யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதியில் 93 வயதுடைய முதியவரின் சடலம் கமுகு மரத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட பாடையில் பெட்டியுடன் மயானம் நோக்கிச் சுமந்து செல்லப்பட்டது.

படையை நான்கு இளைஞர்கள் தோளில் வைத்துச் சுமந்த வண்ணம் 3 கிலோ மீற்றர் தூரமான மயானத்துக்கு அமைதியான முறையில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.

தமிழ் மக்களின் பண்பாட்டுக்கு அமைய பாரம்பரிய முறைப்படி எவருக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் பட்டாசு, மேளம் ஆகியன இன்றி அமைதியான முறையில் இடம்பெற்ற ஊர்வலம் பார்ப்பவர்கள் அனைவரையும் சிந்திக்க வைத்தது.

You might also like