side Add

பாலாவி தீர்த்தக் குளத்தில் – முதலைகள் அட்டகாசம்!!

மன்னார் திருக்கேதீஸ்வரம் பாலாவித் தீர்த்தக் குளத்தில் முதலைகள் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களம் கண்டுகொள்ளாது இருக்கின்றது என்று ஆலயத் திருப்பணிச் சபை குற்றஞ்சாட்டுகிறது.

பஞ்ச ஈஸ்­வ­ரங்­க­ளில் ஒன்­றான நாயன்­மார்­க­ளால் பாடல் பெற்ற மன்­னார் திருக்­கே­தீஸ்­வ­ரத் திருத்­த­லத்­துக்கு நாட்­டின் பல இடங் க­ளில் இருந்­தும் தினமும் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­க­ளும், திரு­வி­ழாக் காலங்­க­ளில் பல இலட்­சக் கணக்­கான மக்­க­ளும் இன மத பேத­மின்றி வருகை தந்து பாலாவி தீர்த்­தக் குளத்­தில் தீர்த்­தம் எடுத்து நீராடி தங்­க­ளது நேர்த்­திக் கடன்­களை நிறைவு செய்­வ­துண்டு.

ஆனால் சில மாதங்­க­ளாக திருக்­கே­திஸ்­வ­ரத்­தின் பாலாவி தீர்த்­தக்­கு­ளத்­தில் முத­லை­கள் நிறைந்து காணப்­ப­டு­வ­தா­க­வும் தீர்த்­தக் குளத்­தில் நீரா­டச் செல்ல மக்­கள் அச்­சப்­ப­டு­கின்­ற­தா­க­வும் அங்கு சென்­று­வந்த மக்­கள் தெரி­வித்­த­னர்.

இது தொடர்­பில் திருக் கே­தீஸ்­வர ஆல­யத் திருப்­ப ­ணிச் சபை உறுப்­பி­னர் மகா­லிங்­கம் நடே­சா­னந்­த­னி­டம் கேட்­ட­போது,

‘‘மாவட்­டத்­தில் பெய்த கடும் மழை­யின் கார­ண­மாக புனி­த­மான பாலா­வித் தீர்த்­தக் குளத்­தில் முத­லை­கள் அதி­க­ள­வில் வந்து சேர்ந்­தி­ருக்­கின்­றன. இதனை கண்­கா­ணித்து மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்­வு ­டன் தெரி­யப்­ப­டுத்­தும் வகை­யில் அறி­வு­றுத்­தல் பதா­கையை அந்த இடத்­தில் வைத்­தி­ருக்­கின்­றோம்.

அது­மட்­டு­மல்­லா­மல் பக­லில் காவ­லாளி ஒரு­வரை நிய­மித்து வரு­கின்ற அடி­ய­வர்­கள் தீர்த்­தம் எடுக்­கின்­ற­வர்­கள் பாலா­வித் தீர்த்­தக் குளத்­தில் குளிக்­கின்­ற­ வர்­கள் அனை­வ­ருக்­கும் அந்த காவ­லாளி மூலம் முத­லைப் பிரச்­சினை தொடர்­பில் தெரி­யப்­ப­டுத்­து­கின்­றோம்.
மடு­வில் இருக்­கின்ற மாவட்ட வன ஜீவ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­துக்கு இது தொடர்­பில் கடந்த மாதம் பதி­னைந்­தாம் திகதி கடி­தம் கொடுத்­தோம்.

அத­னை­விட முத­லை­கள் அட்­ட­கா­சம் பற்­றி­யும் அவற்­றால் ஏற்­ப­டும் விளை­வு­கள் பற்­றி­யும் வங்­கா­லை­யில் உள்ள வன ஜீவ­ரா­சி­க­ளின் உப அலு­வ­ல­கத்­துக்­குப் பொறுப்­பான அதி­காரி திசா­ருக்­கும் பல தடவை தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளோம். எனி­னும் குளத்­தில் உள்ள முத­லை­க­ளைப் பிடித்து வெளி­யில் அகற்றி பக்­தர்­கள் அச்­ச­மின்றி குளத்­தில் நீராடி வழி­ப­டு­வ­தற்கு வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளம் எந்த ஒரு முன்­னேற்­ற­க­ர­மான முயற்­சி­க­ளும் எடுக்­க­வில்லை.

மாறாக, ‘தண்­ணீ­ருக்­குள் இருக்­கும் முத­லை­களை பிடித்து அகற்­று­வ­தற்கு எங்­க­ளி­டம் போதிய உப­க­ர­ணங்­கள் இல்லை. கொழும்­புக்கு இந்த தக­வல்­களை அனுப்பி அனு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து அதற்­கான கூடு­கள் உப­க­ர­ணங்­கள் வர­வேண்­டும்’ என்று சாட்­டு­க­ளைக் கூறி வன ஜீவ­ரா­சி­கள் திணைக்­க­ளம் காலம் கடத்­து­கின்­றது.

எனவே, காலம் கடத்­தும் செயற்­பா­டு­களை விட்­டு­விட்டு வர­வி­ருக்­கின்ற திரு­வி­ழாக் காலத்­தில் கோவி­லுக்கு வரும் பெரு­ம­ள­வி­லான பக்­தர்­கள் அச்­ச­மும் அசம்­பா­வி­தங்­க­ளும் இல்­லா­மல் பாலா­வித் திர்த்­தக் குளத்­தில் நீராடி வழி­பாடு செய்­வ­தற்கு ஏற்­ற­வாறு குளத்­தில் உள்ள முத­லை­களை வெகு விரை­வில் பிடித்து வெளியே அகற்றி விட வேண்­டும் என பொது­மக்­கள் சார்­பாக திருக்­கே­ திஸ்­வ­ரத் திருத்­தல ஆலய நிர்­வா­க­மும் ஆலய திருப்­ப­ணிச்­ச­பை­யும் வன ஜீவ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­தி­ன­ரி­ டம் வின­ய­மாக கேட்­டுக்­கொள்­கின்­றோம்’’-­–என்­றார்.

திருக்­கே­தீஸ்­வ­ரம் பாலா­வித் தீர்த்­தக்­கு­ளத்­தில் முத­லை­கள் இருப்­பது தொடர்­பா­க­வும் ஆல­யத் திருப் பணிச் சபை­யி­ன­ரின் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பா­க­வும் வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­தின் வங்­காலை உப அலு­வ­ல­கத்­தில் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, ‘‘திருக்­கே­தீஸ்­வ­ரம் ஆலய நிர்­வா­கத்­தி­ன­ரும் ஆலய திருப்­ப­ணிச் சபை­யி­ன­ரும் எம்­மி­டம் தொடர்பு கொண்டு பாலாவி தீர்த்­தக் குளத்­தில் முத­லை­கள் இருப்­பது தொடர்­பாக கடி­தம் மூலம் அறி­வித்­தல்­கள் தந்­துள்­ளார்­கள். இந்த சம்­ப­வம் தொடர்­பாக மடுப்­ப­கு­தி­யில் இருக்­கும் தலைமை அலு­வ­ல­கத்­துக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளோம்.

அனு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து நீருக்­குள் இருக்­கும் முத­லை­க­ளைப் பிடிப்­ப­தற்­கான அனு­ம­தி­யும் அதற்­கான மருத்­துவ அதி­காரி மற்­றும் உப­க­ர­ணங்­கள் வந்­த­வு­டன் விரை­வில் முத­லை­களை அகற்ற நட­வ­டிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரி­வித்­த­னர்.

You might also like
X