பிரதேச சபை அமர்வில் – கேம் விளையாடிய உறுப்பினர்!!

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது கையடக்க தொலைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெண் உறுப்பினர்.

நல்லூர் பிரதேச சபையின் இன்றைய அமர்விர், பிரேரணைகள் குறித்த விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தனர்.

சபையின் உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருந்தனர். எனினும் நல்லூர் பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெண் உறுப்பினர் ஒருவர் எந்த விவாதங்களிலும் கலந்து கொள்ளாது சபையில் தனது கையடக்க தொலைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

You might also like