பிரதேச செயலர் இன்றி செயற்படும் கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் அதிக மக்கள் வாழும் பிரதேச செயலாளர் பிரிவான கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு கடந்த 72 நாள்களாக பிரதேச செயலாளர் நியமிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப் படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரை உள்ளடக்கிய கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலாளராகப் பணியாற்றிய குணபாலன் மன்னார் மாவட்டத்தின் மேலதிக மாவட்டச் செயலராகப் பதவி உயர்வு பெற்று கடந்த பெப்ரவரியில் மாற்றலாகிச் சென்றார். அன்றிலிருந்து இன்றுவரை குறித்த பிரதேச செயலாளர் பிரிவு பிரதேச செயலாளர் இன்றியே இயங்குகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மக்கள் வாழும் நிலையில் 44 ஆயிரம் மக்கள் கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கின்றனர்.

இதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மற்றுமோர் பிரதேச செயலாளர் பிரிவான ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பயிற்சி நெறி ஒன்றுக்காக வெளிநாடு சென்ற நிலையில் கடந்த 6 மாதகாலமாக உதவிப் பிரதேச செயலாளரே பணியாற்று கின்றமையும் குறிப்பிடத்தக்கது.-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close