புதுக்குடியிருப்பு பிரதேச சபையில்- உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் இன்றைய அமர்வில் கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்த மக்களுக்கு அஞசலி செலுத்தப்பட்டது.

சமை அமர்வின் தொடக்க நிகழ்வில் சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபையின் ஊழியர்கள் ஆகியோர் மொழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து நினைவுரையை பிரதேச சபை உறுப்பினர் ஆ.ஜேன்சன் மற்றும் உபதவிசாளர் க.ஜெனமேஜனந்,பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் ஆகியோர் நிகழ்தினர்.

You might also like