புலிகளால் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடியவர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் விடுதலைப் புலிகளால் தங்கம் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் தனியார் வீடு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக இன்று அகழ்வு செய்யப்பட்டது.

கடந்த மாதம் 27ஆம் திகதி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தைத் தேடி 15 பேர் அடங்கிய குழுவைப் பொலிஸார் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த பகுதியை அகழ்வு செய்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

புதுக்குடியிருப்பு உதவிபிரதேச செயலாளர், கிராமசேவையாளர், தொல்பொருள்திணைக்கள உத்தியோகத்தர்கள், படையினர், பொலிஸார் முன்னிலையில் தேடுதல் இடம்பெற்றது. எனினும் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் அந்தப் பகுதி மீண்டும் மூடப்பட்டது.

You might also like