பூநகரி பிரதேச செயலர் குழு- இரணைதீவு மக்களுடன் சந்திப்பு!!

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலருடனான அதிகாரிகள் குழு, இரணைதீவு கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் அனுசரணையுடன் படகுகளில் இரணைதீவுக்குச் சென்றது.

இதன் போது 2018 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட மீள் குடியேற்ற அமைச்சின் வேலைத்திட்ட முன்னேற்றங்களை பார்வையிட்டு விரைவுபடுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.

அத்துடக் வறட்சியால் பாதிக்கப்பட்ட 52 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதி வழங்கப்பட்டது.

மேலும் நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட காணி உரிமையாளர்கள் பரிசீலிக்கப்பட்டு ஆவணம் வழங்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

You might also like