பெரும் வாகனப் பேரணியுடன் கிளிநொச்சியில் போதை ஒழிப்பு வாரம்!!

“போதையிலிருந்து விடுப்பட்ட நாடு, நான் போதையை எதிர்க்கிறேன்“ ஆகிய தொனிப்பொருளில் வடக்கு மாகாணத்தின் போதை ஒழிப்பு வார நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றன.

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் 23 திகதி தொடக்கம் முதலாம் திகதி வரை நாடாளவிய ரீதியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதற்கமைவாக வடக்கு மாகாண நிகழ்வு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து வருகை தந்த வாகன ஊர்வலத்துடன் கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

You might also like