பொலிஸாரின் துப்பாக்கியை பறித்த நபர் தப்பியோட்டம்!!

தலைக்கவசம் அணியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை போக்குவரத்து பொலிஸார் தடுத்து நிறுத்த முயற்சித்தபோது அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்று எதிரே வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டனர்.

இந்தச் சம்பவம் மட்டக்களப்பு புதூர் திமில தீவுப்பகுதியில் இன்று நடந்தது.

குறித்த பகுதியில் குவிந்த இளைஞர்கள் சிலர் போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

அத்துடன், போக்குவரத்து பொலிஸாரின் கைத் துப்பாக்கியை ஒருவர் பறித்துக்கொண்டு ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு புதூர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

You might also like