மக்கள் குடியிருப்புப் பகுதியில் தீ!!

கிளிநொச்சி நகரில் நீதிமன்றுக்குப் பின்புறமாக மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் தீ பரவுள்ளது.

நீதி மன்றுக்கு பின்புறமாக சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியில் சிறைக் கைதிகளை கொண்டு துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்து. இதன் போது ஏற்கனவே வீழ்த்தப்பட்டு காய்ந்திருந்த ஆலமரத்துக்கு தீ வைக்கப்பட்ட போதே அது பெரியளவில் சுவாலை எரிந்தது. அத்தோடு மக்களின் குடியிருப்புகளில் உள்ள வான் பயிர்களுக்கும் பரவியது.

கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

You might also like