மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு-மன்னாரில் திரண்ட மகிந்த ஆதரவாளர்கள்!!

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை நடாத்தக் கோரி மகிந்தவின் ஆதரவாளர்களால் மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

‘சிறிலங்கா பொது ஜன பெரமுன’ கட்சியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஸார் பகுதிக்குச் சென்று பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

”மீண்டும் பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமிக்க வேண்டும். சுயாதினமான பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் ” என்ற கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

You might also like