மடு திருவிழா தொடர்பில்- முன்னாயத்த கலந்துரையாடல்!!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆணி மாத திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக அவசர மீளாய்வு கூட்டம் மடு ஜோசப்வாஸ் கோட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றது.

மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மன்னார் மாவட்டச் செயலர் சி.ஏ.மோகன்றாஸ்,மடு பிரதேசச் செயலாளர், திணைக்களங்களின் பிரதி நிதிகள், இராணுவம், பொலிஸ், கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

You might also like