மதத்தலைவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கவனவீர்ப்பு ஊர்வலம்!!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கவனவீர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.

மதத்தலைவர்களினால் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரத போராட்டத்துக்கு இணைவாக இந்த போராட்டம் முற்போக்கு தமிழர்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

காந்திபூங்காவில் ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு பேருந்து நிலையம் வரைசென்று மீண்டும் காந்திபூங்காவை வந்தடைந்தது.

அதனைத்தொடர்ந்து காந்திபூங்காவில் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

You might also like