மன்னாரில் சட்ட விரோத மீன்பிடி அதிகரிப்பு!!

மன்னார் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சுருக்குவளை, டைனமோட், தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுதல், சட்டவிரோதமாக சங்கு அகழ்வுகளில் ஈடுபடல், கட்டுவலை நிபந்தனைகளை மீறி மீன்பிடித்தல், டோலர் படகுகளை பயன்படுத்தி மீன்பிடித்தல் போன்ற பல்வேறு விதமான நடவடிக்கைகள் மன்னார் கடல் பகுதிகளில் இடம்பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு சில அரசியல்வாதிகள் ஆதரவு வழங்குவதுடன் சில தொழில்களுக்கு அனுமதியும் பெற்றுக் கொடுக்கின்றனர் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

You might also like