மன்னாரில் வேலையற்ற பட்டதாரி நேர்முகத் தேர்வில் 380 பேர் தகுதி !!

மன்­னார் மாவட்­டத்­தில் அண்­மை­யில் நடை­பெற்ற வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நேர்­மு­கத் தேர்­வில் 380 பேர் அடிப்­ப­டைத் தகுதி பெற்­றுள்­ள­னர் என்று மன்­னார் மாவட்ட மேல­திக செய­லா­ளர் எஸ்.குண­பா­லன் தெரி­வித்­தார்.

கடந்த மாத இறு­தி­யில் மன்­னார் மாவட்­டத்­தி­லுள்ள வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நேர்­மு­கத் தேர்வு மன்­னார் மாவட்ட செய­ல­கத்­தில் மூன்று பிரி­வு­க­ளாக இடம்­பெற்­றது. இந்த நேர்­மு­கத் தேர்­வுக்கு மன்­னார் மாவட்­டத்­தைச் சேர்ந்த 978 பேர் விண்­ணப்­பித்­தி­ருந்­த­னர்.

இவர்­க­ளில் 554 நபர்­கள் மட்­டுமே நேர்­மு­கத் தேர்­வுக்கு சமூ­க­ம­ளித்­த­னர். விண்­ணப்­பித்­த­வர்­க­ளில் 424 பேர் நேர்­மு­கத் தேர்­வுக்கு சமூ­க­ம­ளிக்­க­வில்லை. நேர்­மு­கத் தேர்­வுக்கு சமூ­க­ம­ளித்­த­வர்­க­ளில் 2017ஆம் ஆண்­டில் பட்­டம் பெற்­றோர் 121 பேரும், வய­தெல்­லைக்கு மேற்­பட்­டோர் 24 பேரும் உள்­ள­டங்­கு­கின்­ற­னர். இவர்­கள் தமக்­கான தகு­தியை இழந்­துள்­ள­னர் என்று குணபாலன் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close