மலத்தியோன் விற்பனை செய்தால் சட்டம் பாயும்

வர்த்தக நிலையங்களுக்கு சுகாதார திணைக்களம் எச்சரிக்கை

மலத்தியோன் பவு­டரை விற்­பனை செய்­யும் வர்த்­தக நிலை­யங்­கள் மீது சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என யாழ்ப்­பாண மாவட்ட சுகா­தார திணைக்­க­ளம் அறி­வித்­துள்­ளது.

இலங்கை அர­சி­னால் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள பொருள்­களை சட்ட விரோ­த­மான முறை­யில் வர்த்­தக நிலை­யங்­க­ளில் விற்­பனை செய்­வது கண்டு பிடிக்­கப்­பட்­டால் சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத­ன­டிப்­ப­டை­யில் மலத்­தி­யோன்,புற்­களை அழிப்­ப­தற்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் ரவுண்­டப் போன்ற இர­சா­ய­னப் பொருள்­கள் கடை­க­ளில் பதுக்கி வைக்கப்பட்டு தற்­பொ­ழு­தும் விற்­பனை செய்­யப்­பட்டு வரு­வ­தாகக் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

பொது­மக்­க­ளி­டம் இருந்து இவை தொடர்­பாக ஏதா­வது முறைப்­பா­டு­கள் கிடைக்­கும் பட்­சத்­தில் சம்­பந்­தப்­பட்ட வர்த்­தக நிலை­யம் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.

அத்­து­டன் சட்ட விரோ­த­மான முறை­யில் இவ்­வா­றான பொருள்­கள் விற்­கப்­ப­ டு­வதை அறிந்­தால் உட­ன­டி­யாக யாழ்ப்­பாண சுகா­தா­ரப் பிரி­வுக்கு நேர­டி­யா­கவோ அல்­லது 021–2222278 என்ற தொலை­பேசி இலக்­கத்­தின் ஊடாகவோ முறைப் பாட்டை மேற்­கொள்ள முடி­யும் என யாழ்ப்­பாண மாவட்ட சுகா­தார திணைக்­க­ளம் அறி­வித்­துள்­ளது.

You might also like