மாவை எம்.பியால்- இளைஞர் கழகத்துக்கு உதவி!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை இந்து இளைஞர் கழகத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவால் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கழகத்தினரால் நடாத்தப்பட்டு வரும் மேசைப்பந்தாட்டப் பயிற்சிகளை மேலும் வலுவூட்டும் நோக்குடன், மேசைப்பந்தாட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வலி வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன், வலி வடக்குப் பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ ஆகியோரின் ஒழுங்கமைப்பில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

You might also like