மீண்டும் அதே குற்றம்- பெண்ணுக்கு 6 மாதங்கள் சிறை!!

நீதிமன்றத் தண்டணைக் காலத்தில் மீண்டும் அதே குற்றத்தைச் செய்த பெண்ணுக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கசிப்பு விற்பனை செய்த பெண் கடந்த 2016 ஆம் ஆண்டு சாவகச்சேரி மதுவரி நிலையத்தினரால் பிடிக்கப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பெண்மணி குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து தண்டத்துடன் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

தண்டப் பணம் செலுத்தாததால் குறித்த ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த வெளியே வந்துள்ளார்.

கடந்த வாரம் கசிப்பு விற்பனை செய்தமைக்காக குறித்த பெண்ணுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து பெண்ணுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

You might also like