முட்டைப் பிரியாணி

தேவையானவை

முட்டை -5
பிரியாணி அரிசி -அரைகிலோ
வெங்காயம் -இரண்டு
தக்காளி -மூன்று
இஞ்சி பூண்டு விழுது -இரண்டு கரண்டி
மிளகாய்தூள் -ஒருகரண்டி
மசாலாதூள் -ஒருகரண்டி
மஞ்சள்தூள் -ஒரு தேக்கரண்டி
தயிர் -150கிராம்
தேங்காய்பால் -150கிராம்
உப்பு -இரண்டு தேக்கரண்டி
எண்ணெய்+நெய்-1 00கிராம்
பட்டை சிறியதுண்டு
கராம்பு ,ஏலக்காய் -தலா இரண்டு

செய்முறை
அரிசியை உதிர் உதிராக வேகவைத்துக் கொள்ளவும்

முட்டையை வேகவைத்து தோல்களை உரித்துக் கொள்ளவும் அதை லேசாக கீறிக்கொள்ளவும்

வெங்காயம் தக்காளியை வெட்டிக் கொள்ளவும்

பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கராம்பு , ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கி இஞ்சி பூண்டு மிளகாய்தூள், மஞ்சள்தூள், மசாலாதூள் போட்டு கிளறி முட்டையை போட்டு இரண்டு நிமிடம் போட்டு வதக்கவும்.

தேங்காய்பால் தயிர் ஊற்றி ஒருகப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் வேகவிடவும்.

உதிர்த்து வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறி மூடி விடவும்!!

You might also like