side Add

முன்பள்ளிக்கு தனிநபர்கள் இடையூறு- பொலிஸாரி்டம் முறைப்பாடு!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மாணிக்கபுரம் பகுதியில் அமைந்துள்ள கார்த்திகன் முன்பள்ளிக் காணியினை தமது என்று கோரி கற்றல் செயற்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக, முன்பள்ளி ஆசிரியர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணிக்கபுரம் பகுதியில் காணப்பட்ட மூன்று ஏக்கர் அரச பொதுக்கணியினை போரின் பின்னர் 2016 ஆம் ஆண்டு தெற்கில் இருந்து வந்த குடும்பம் ஒன்று தங்களின் காணி என்று உரிமை கோரி வந்துள்ள நிலையில் அவர்களின் குடியேற்றத்திற்காக பிரதேச செயலகத்தினால் ஒரு தொகுதி காணி வழங்கப்பட்டுள்ளது

ஏனைய அரச காணிகளை பொது தேவைக்காக பிரதேச செயலாளர் பகிர்ந்தளித்துள்ளார் அவற்றுள் கார்த்திகன் முன்பள்ளிக்கு என 24 பேர்ச் விஸ்தீரனம் கொண்ட காணி எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது

கார்த்திகன் முன்பள்ளியில் மூன்று ஆசிரியர்களுடன், ஜம்பது வரையான முன்பள்ளி மாணவர்களும் கல்வி கற்று வருகின்றனர்.

முன்பள்ளியின் வளர்ச்சி கருதி மலசலகூடம், கிணறு கட்டடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் அருகில் உள்ள தனிநபர்கள் தங்கள் காணி என்று கூறி அங்கு கட்டுமான பணிகளில் ஈடுபட்டவர்களை விரட்டியதுடன் முன்பள்ளி ஆசிரியர் மீது தாக்குதலும் மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தியும் குறித்த தனிநபர்களின் செயற்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளர் பொலிஸாருக்குக் கடிதம் அனுப்பி வைத்தார்.

இதனால் முன்பள்ளியின் கற்றல் செயற்பாடு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாத நிலை காணப்படுவதாக முன்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

You might also like