முன் சக்கரங்கள் கழன்றதில் தடம்புரண்டது பாரவூர்தி!!

பாரவூர்தி ஒன்றின் முன் சக்கரங்கள் கழன்று வீழ்ந்து தடம்புரண்டது. அதில் இருவர் காயமடைந்தனர்.

இந்த விபத்து முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுப் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கி எரு ஏற்றிச் சென்ற பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள காணிக்குள் தடம்புரண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like