முஸ்லிம் அமைச்சர்கள்- இருவர் மீளப் பதவியேற்பு!!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுள்னர்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து, முஸ்லிம் அமைச்சர்கள் பதவியை விட்டு விலகினர்.

அவ்வாறு பதவி விலகிய கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும், அப்துல் ஹலீம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் மீளப் பதவியேற்றனர்.

You might also like