முஸ்லிம் பிரதிநிதிகள்- மகாநாயக்கர்களுடன் சந்திப்பு!!

அமைச்சுப் பதவிகளை விட்டு விலகிய, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாநாயக்க தேரர்களை கண்டியில்  இன்று சந்தித்தனர்.

அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியவர்களை, மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு நாட்டிலுள்ள மூன்று பீடங்களின் மகாநாயக்கர்கள் கூட்டாக எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினைகள் இருந்தால், கலந்துரையாடல்கள் மூலம் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து முஸ்லிம் பிரதிநிதிகள் மகாநாயக்கர்களை இன்று சந்தித்தனர்.

You might also like