யானையிடம் இருந்து பாதுகாக்கக் கோரி மனு!!

காட்டு யானைகளின் பாதிப்புக்களிலிருந்து தங்களை பாதுகாக்குமாறு கோரி கிளிநொச்சி கண்டாவளை ரங்கன்குடியிருப்பு மக்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலரிடம் இன்று மனுக் கையளித்தனர்.

கண்டாவளை பிரதேச செயலகத்துக்குச் சென்ற மக்கள் அங்கு பிரதேச செயலாளரிடம் தங்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறிய பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு காட்டு யானைகளின் அழிக்கப்பட்ட பயிர்களின் எச்சங்களுடன் சென்றனர்.

அங்கு மாவட்டச் செயலரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தனர்.

You might also like