ராக்கி படத்தில் ஸ்ரீகாந்த்

0 62

நாயை மையமாக வைத்து உருவாகி வரும் ‘ராக்கி’ படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நேர்மையான பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ராக்கி’. இவருடன் ஒரு நாய்க்குட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார் ஸ்ரீகாந்த்.

ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் பொலிஸ் துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். எம்.எல்.ஏ.வுடன் ஏற்படும் பிரச்சினையில், ஸ்ரீகாந்தை கொலை செய்து விடுகிறார்கள். ஆனால், ராக்கி ஸ்ரீகாந்தை கொலை செய்தவர்களை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விவேக் வெளியிட்டார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

You might also like