வங்கி ஊழியர்கள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!!

ஊழியர் நலன்புரியின் மீது வரி அறவிடுவதனை உடன் நிறுத்தக் கோரி, இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் திருகோணமலை பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று காலை ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

You might also like