வலி சுமந்த நெஞ்சினராய்…!!

2006 ஆம் ஆண்டு மே மாதம் இரண்­டாம் நாள். அது­வொரு செவ்­வாய்க்­கி­ழமை. இருண்­ட­தும் இரு­ளா­த­து­மான நிலமை. ஊர­டங்­குச் சட்­டம் போடப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆனால் போட்­டது போன்­ற­தொரு பிம்­மம். போர்க் காலத்­தில் தமி­ழர் தாயக மக்­க­ளின் ஏக அபி­மா­னத்தை வென்று தனக்கே உரித்­தான மிடுக்­கு­டன் நடை­போட்­டுக் கொண்­டி­ருந்த உத­யன், துப்­பாக்கி முனை­க­ளில் மீண்­டு­மொரு தடவை மிரட்­டப்­ப­டு­கி­றான். கடந்த 12 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் நடந்த அந்­தச் சம்­ப­வ­மும், அதன் பின்­னர் குடா­நாட்­டில் நில­விய பதற்­ற­மும் கண்­க­ளின் முன்­னால் இன்­றும் நினை­வா­டு­கின்­றன, நிழ­லா­டு­கின்­றன.

குறித்த தினத்­தன்று, இரவு 7.40 மணி­ய­ள­வில் ‘உத­யன்’ பணி­ம­னைக்­குள் அத்­து­மீறி நுழைந்த ஆயு­தா­ரி­கள் கண்­மூ­டித்­த­ன­மான துப்­பாக்­கிச் சூட்டை நடத்­து­கின்­ற­னர். விற்­பனை முகா­மை­யா­ள­ரா­கப் பணி­யாற்­றிய ஜோர்ஜ் சகா­ய­தாஸ், விநி­யோ­கப் பகு­திப் பணி­யா­ள­ரா­கப் பணி­யாற்­றிய ரஞ்­சித்­கு­மார் என இரு பணி­யா­ளர்­கள் ஆயு­த­தா­ரி­க­ளின் துப்­பாக்கி வேட்­டு­க­ளில் சிக்­குண்டு துடி­து­டித்து சாவ­டை­கின்­ற­னர். இரண்­டு­பேர் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

உத­யன் நிறு­வ­னத்­தின் கணி­னி­கள் உள்­ளிட்ட சாத­னங்­கள் அடித்து நொறுக்­கப்­ப­டு­கின்­றன. பெரும் பொரு­ளா­தா­ரச் சேதம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இந்­தத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்டு இன்று 12 ஆண்­டு­கள் நிறை­வு­ று­கின்­றன.

எனி­னும் எவ­ரும் இது­வரை கைது­செய்­யப்­ப­ட­வில்லை. இது துய­ரி­லும் பெருந்­து­யர். ஊட­க­நி­று­வ­ன­மொன்று தாக்­கப்­பட்­டமை குறித்து இன்று­வரை உண்மை கண்­ட­றி­யப்­ப­டா­த­மை­யா­னது இலங்கை ஒரு சன­நா­யக சோச­லி­சக் குடி­ய­ரசா என்­பது தொடர்­பி­லும், இந்த நாட்­டின் சட்­டத்­துறை, நிர்­வா­கத்­துறை மற்­றும் நீதித்­து­றை­யின் செயற்­பா­டு­கள் தொடர்­பி­லும் இமா­லய அள­வில் சந்­தே­கங்­களை தோற்­று­வித்­துள்­ளன. இந்­தச் சந்­தே­கங்­கள் ‘நல்­லாட்சி’ என்று கூறிக்­கொள்­ளும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன – தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான கூட்டு அர­சி­லும் தொடர்வது அபத்­தத்­தி­லும் அபத்­தம்.

முதல்­மு­றை­யல்ல
இவ்­வா­றான தாக்­கு­தல்­கள் உத­ய­னுக்குப் புதி­தல்ல. இதற்கு முன்­ன­ரும் ‘உத­யன்’ இத்­த­கைய கொலை வெறி­யா­ளர்­களை எதிர்­கொண்­ட­வன்­தான். இதற்­கெல்­லாம் அஞ்­சாத நிலை­யில் தனது பணி­களை நெஞ்­சு­ரத்­து­டன் மேற்­கொண்டு வரு­கின்­றான். இனி­யும் அப்­ப­டியே. கடந்த மூன்று தசாப்­தங்­க­ளுக்­கும் மேலாக எவ­ருக்­கும் விலை போகாது, சோரம் போகாது, நிமிர்ந்த நெஞ்­சு­டன் தனது கருத்­துக்­களை உண்­மை­யின் வாயி­லாக வெளிக் கொண­ரும் தனது பணி­யில் ‘உத­யன்’ சிறி­தும் சோர்­வ­டை­யாத நிலை­யில் தன்னை ஈடு­ப­டுத்தி வரு­கின்­றான். தமிழ் மக்­கள் மீதான கொடு­மை­கள், தமி­ழர் தாய­கத்­தில் அரங்­கே­றும் அவ­லங்­கள் ஆகி­ய­வற்றை உட­னுக்கு­டன் வெளிக்­கொண்டு வரும் பணி­யில் இரவு, பகல் முழு மூச்­சு­டன் ஈடு­பட்டு வரு­கின்­றான். ஆக, சமூக விரோ­தி­க­ளுக்­குச் சிம்­ம­சொப்­ப­ன­மாக விளங்­கும் உத­யனை அவர்­கள் தாக்­கத்­தான் செய்­வார்­கள். அதுவே யதார்­த­மும்.

நான்­கா­வது துறை
ஒரு ஜன­நா­யக நாட்­டின் நான்­கா­வது தூண் அல்­லது நான்­கா­வது துறை என்று ஊட­கத்­து­றை­யைக் குறிப்­பி­டு­வார்­கள். சட்­டத்­துறை, நிர்­வா­கத் துறை, நீதித்­துறை ஆகி­ய­வற்­றுக்கு அடுத்த படி­யான இடம் இந்த ஊட­கத்­து­றைக்­குக் கொடுக்­கப்­ப­டு­கி­றது. சட்­டத்­துறை சட்­டத்தை ஆக்­கும், நிர்­வா­கத்­துறை அவ்­வாறு ஆக்­கப்­பட்ட சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தும், நீதித்­துறை சட்­டங்­களை உயிர்ப்­பு­டன் வைத்­தி­ருக்­கும், தீர்ப்பு வழங்­கும். ஊட­கத்­து­றையோ அனைத்­துத் துறை­க­ளை­யும் கண்­கா­ணித்­துக் கொண்­டி­ருக்­கும். இத­னால்­தான் மேற்­கத்­திய நாடு­க­ளில் ஊட­கங்­கள் என்­றால் அதி­முக்­கி­யத்­து­வம் கொடுத்து வரு­கி­றார்­கள். ஆனால் இலங்­கை­யிலோ இந்த நான்­கா­வது துறை நாயி­லும் கேவ­ல­மா­கவே மதிக்­கப்­ப­டு­கி­றது. இதனை நிரூ­பிக்­கும் வகை­யில் உத­யன் மீதான தாக்­குதல்களும் ஏனைய ஊட­க­வி­ய­லா­ளர்­கள் மற்­றும் ஊடக நிறு­வ­னங்­கள் மீதான தாக்­கு­தல்­க­ளும் அமை­கின்­றன. இந்­தச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் விசா­ர­ணை­கள் இது­வரை முன்­னெ­டுக்­கப்­ப­ட­ வில்லை. இனி­வ­ரும் காலத்­தி­லா­வது முன்­னெ­டுக்­கப்­ப­டுமா என்­றால் அதற்­கு­ரிய அறி­கு­றி­கள் தெரி­யவே இல்லை.

பீனிக்ஸ் பற­வை­யாய்
சாம்­ப­ருக்­குள் இருந்து எழுந்து பறக்­கு­மாம் பீனிக்ஸ் பறவை. உத­ய­னும் ஒரு­வ­கை­யில் பீனிக்­ஸே­தான். ‘உத­யன்’ பத்­தி­ரிகை மீது காலத்­துக்­குக் காலம் நடத்­தப்­ப­டும் தாக்­கு­தல்­க­ளால், தாக்­கு­தலை மேற்­கொண்­ட­வர்­கள் எந்­த­வி­த­மான பய­னை­ப் பெற்­ற­னர் என்றோ அல்­லது தமது சூழ்ச்­சி­யில் வெற்­றி­பெற்­ற­னரா என்றோ தெரி­ய­வில்லை. ஏனென்­றால், உத­ய­னின் குரல்­வ­ளையை நெரிப்­ப­தில் அவர்­கள் தொடர்ந்து சந்­திப்­ப­தென்­னமோ தோல்­வியை மட்­டுமே. உண்­மை­யான ஊட­க­வி­ய­லா­ளன் ஒரு போதுமே மௌனிக்க மாட்­டான். அந்த வரி­சை­யில் இமா­ல­யப் பலம் மிக்­க­வன் உத­யன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close