வவுனியாவில் மீண்டுமொரு அகதி முகாம் வேண்டாம்!!

வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் குடியேற்றங்கள் முற்றுப் பெறாத நிலையில், மீண்டுமொரு முகாமை அமைத்து அங்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகளை குடியேற்றுவது பொருத்தமற்ற செயற்பாடு என்று ஈழபுரட்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறித்த அமைப்பின் ஊடக பேச்சாளர் சுப்பையா ராஜகோபால் இதனைத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்க மாணவர்கள் உள்ளிட்ட மூவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

You might also like