விக்ரோறியாக் கல்லூரியில்- திறன் வகுப்பறை திறப்பு!!

யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் திறன் பலகை மற்றும் மடிக்கணினிகள் தொகுதி உள்ளடங்கிய கணித திறன் வகுப்பறை இன்று திறக்கப்பட்டது.

கல்லூரியின் அதிபர் திருமதி.சத்தியகுமாரி சிவகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் கா.சந்திரபாலன் கலந்து கொண்டு வகுப்பறையைத் திறந்து வைத்தார்.

வகுப்பறையை வர்ணம் தீட்டிப் புதுப்பித்து உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுக்க கல்லூரியின் 2008 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்கள் நிதிப் பங்களிப்பு வழங்கியுள்ளனர்.

You might also like